Home One Line P1 குரல் பதிவு: உளவு பார்த்தது யார் என்பதை காவல் துறை விசாரிக்க வேண்டும்!

குரல் பதிவு: உளவு பார்த்தது யார் என்பதை காவல் துறை விசாரிக்க வேண்டும்!

529
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் மற்றும் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோரின் தொலைபேசி உரையாடல் தொடர்பாக விசாரிப்பதற்கு பதிலாக, அவ்வுரையாடலை உளவு பார்த்ததை காவல் துறை விசாரிக்க வேண்டும்.

அவர்களின் தனிப்பட்ட தனியுரிமையை மீறியிருந்தால் இது விசாரிக்குமாறு காவல் துறை வலியுறுத்தப்படுகிறது.

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம் குரல் பதிவு வெளியாக யார் காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

“சாஹித் மற்றும் அன்வாரின் குரல் பதிவு உண்மையானது என்றால், விசாரிக்கப்பட வேண்டியது சாஹிட் மற்றும் அன்வாரை அல்ல. குற்றம் செய்த, விசாரிக்கப்பட வேண்டிய நபர் அவர்களின் தொலைபேசி உரையாடலை உளவு பார்த்தவர். அது யார்? இது ஒரு சாதாரண தனிநபரா அல்லது அரசாங்க நிறுவனமா?. ” என்று அவர் கேட்டார்.

தனிப்பட்ட தனியுரிமையின் முக்கியத்துவத்தை ஹசான் அடிக்கோடிட்டுக் காட்டினார், நாஜி ஜெர்மனி போன்ற “சர்வாதிகார” அரசாங்கங்கள் மட்டுமே தங்கள் அரசியல் எதிரிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும்.

“இது மொகிடின் யாசினின் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நடந்துள்ளது. இப்போது நாடு அந்த மட்டத்தில் உள்ளதா?,” என்று அவர் கேட்டார்.

சாஹிட் மற்றும் அன்வார் இருவரும் குரல் பதிவின் உண்மைத்தன்மையை மறுத்துள்ளனர்.