Home One Line P1 மே மாதம் கொவிட்-19 சம்பவங்கள் இரண்டு இலக்க எண்ணை அடையாது!

மே மாதம் கொவிட்-19 சம்பவங்கள் இரண்டு இலக்க எண்ணை அடையாது!

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மே மாதத்தில் தினசரி கொவிட் -19 தொற்று சம்பவங்கள் இரண்டு இலக்க எண்ணுக்கு கொண்டுவரும் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கணித்துள்ளார்.

ஏப்ரல் 7- ஆம் தேதி முதல் அதிகரித்து வரும் சம்பவங்களின் போக்கு, நான்காவது அலை எச்சரிக்கை மற்றும் தடுப்பூசி விகிதம் மிகக் குறைவாக இருப்பதை அவர் ஆதாரமாக முன்வைத்துள்ளார்.

“மூன்றாவது அலை இன்னும் குறையவில்லை என்றாலும் மலேசியா நான்காவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என்று தற்காப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். சுகாதார அமைச்சு வழங்கிய கொவிட் -19 அல்லது தொற்று விகிதம் 1.07 ஆக உயர்ந்துள்ளது,” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.