Home One Line P1 பெரோடுவா அருஸ் சிங்கப்பூரில் விற்பனையாகிறது

பெரோடுவா அருஸ் சிங்கப்பூரில் விற்பனையாகிறது

946
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெரோடுவா அருஸ் தனது முதல் வெளிநாட்டு சந்தையான சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பெரோடுவா அருஸின் விலை 92,999 சிங்கப்பூர் டாலருக்கு (சுமார் 286,409 ரிங்கிட் ) விற்கப்படுகிறது. இதில் பொருள், சேவை வரி மற்றும் உரிமைச் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.

2019 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து மலேசியாவில் கிட்டத்தட்ட 58,000 அருஸ் கார்கள் விற்கப்பட்ட நிலையில், பெரோடுவா அருஸ் மலேசியாவின் 2019 மற்றும் 2020- ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக விற்பனையான ஸ்போர்ட் பயன்பாட்டு வாகனமாகும்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரைத் தவிர, புருணை, இலங்கை, மொரீஷியஸ், சீஷெல்ஸ், பிஜி மற்றும் இந்தோனிசியா ஆகிய நாடுகளுக்கும் பெரோடுவா ஏற்றுமதி செய்கிறது.