கோலாலம்பூர்: ஆறு நாட்களுக்குப் பிறகு, எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் மேல்முறையீடு தொடர்பான வாதங்களை நஜிப் ரசாக் வழக்கறிஞர்கள் குழு இன்று முடித்துக் கொண்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இந்த வாதத்தை மேல்முறையீட்டு வழக்கறிஞர் பார்ஹான் ரீட் முடித்தார்.
முன்னதாக, நஜிப்பின் சட்டக் குழு கடந்த வாரம் ஏப்ரல் 5- ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு வாதத்தைத் தொடங்கியது. எவ்வாறாயினும், நஜிப்பிற்கு எதிரான தண்டனையை இரத்து செய்வதற்கான வாதத்தை முடிக்க அவர்கள் நேற்றும் இன்றும் கூடுதலாக இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணையின் போது அரசு தரப்பு எதிர்-வாதங்களை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.