Home நாடு காவல் துறையினர் கைது – மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகார்!

காவல் துறையினர் கைது – மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகார்!

878
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஒரு காவல் துறை ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்), அவருடன் சேர்த்து மேலும் 3 காவல் துறையினர், ஒரு நபரை மிரட்டிப் பணம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்து பகாட்டிலுள்ள மரத் தளவாட சாமான்கள் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாகியான 50 வயது நபரிடம் கைது செய்யப்பட்ட காவல் துறையினர் மிரட்டிப் பணம் கேட்டதாக அவர்கள் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஜோகூர் காவல் துறை தலைவர் டத்தோ அயூப்கான் மைடின் பிச்சை இந்தத் தகவலை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் 14 வரையில் 8 காவல்துறையினர் தங்களின் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 12 பேர் இதேபோன்ற நடவடிக்கையை அடுத்த வாரத்தில் எதிர்நோக்கவிருக்கின்றனர் என்றும அயூப்கான் தெரிவித்தார்.