Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு புதிய சலுகைகளை வழங்குகிறது

மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு புதிய சலுகைகளை வழங்குகிறது

795
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) மேலும் பல புதிய சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது.

நீண்ட கால நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் விமான நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தன.

புதிய சலுகைகள் மூலம் பயணச் சீட்டின் (டிக்கெட்) பயண காலம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சேவைக் கட்டணத்தையும் மாஸ் இரத்து செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் 31 டிசம்பர் 2021 வரை பயணிகள் ஏற்கனவே தாங்கள் உறுதிப்படுத்தியிருந்த தங்களின் பயணச் சீட்டுகளை மீண்டும் புதிய தேதிகளில் மறு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அடுத்தாண்டு ஜூன் 2022 வரையிலான பயணங்களுக்கு இப்போதே பயணிகள் தங்களின் பயணத் தேதிகளை நிர்ணயித்து பயணச் சீட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

தங்களின் பயணத் தேதிகளை உறுதி செய்ய பயணிகள் www.malaysiaairlines.com என்ற இணையத் தளத்தை அணுகலாம்.

அல்லது மாஸ் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணான 1-300-88 3000 என்ற எண்ணில் மலேசியாவில் வசிப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம். வெளிநாடுகளில் இருப்பவர்கள் +60-3-7843 3000 என்ற எண்ணில் மாஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளலாம்.