Home One Line P1 கும்ப மேளா திருவிழா தொற்று மையமாக மாறி வருகிறது!

கும்ப மேளா திருவிழா தொற்று மையமாக மாறி வருகிறது!

539
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வார் கும்ப மேளா திருவிழா தொற்று மையமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள முடிவு செய்த நிலையில், கும்பமேளாவில் கடந்த வாரத்தில் இலட்சக்கணக்கானோர் புனித நீராடினர். ஏப்ரல் 14- ஆம் தேதி மட்டும் ஹரித்வாரில் 43 இலட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

இதுவரையிலும் இந்த திருவிழாவிற்குச் சென்ற 2.35 இலட்சம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.