Home One Line P1 மெய்க்காப்பாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: நிலைமையை மோசமாக்க வேண்டாம்!

மெய்க்காப்பாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: நிலைமையை மோசமாக்க வேண்டாம்!

588
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு மெய்க்காப்பாளர்கள் நோன்பு இருந்ததற்காக முதலாளியால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், நிலைமையை மோசமாக்க வேண்டாம் என்றும் காவல் துறை பொதுமக்களை வலியுறுத்தி உள்ளது.

சில பகுதிகளிலிருந்து அச்சுறுத்தல்களுடன் கலந்த பல அழைப்புகளை தனது துறை கண்டறிந்துள்ளதாக சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமட் கூறினார்.

“இதுபோன்ற அறிக்கைகள் நிலைமையை மோசமாக்கும். அத்துடன் பொது ஒழுங்கை பாதிக்கும், மேலும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504-இன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தவிர, பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து பல காணொலிகள் பதிவேற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விசாரணைக்கு உதவ ஐந்து பேர் கைது செய்யப்பட்டதை காவல் துறை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து செய்திகளை ஊகிக்கவோ, பகிரவோ, பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.