Home இந்தியா தமிழ்நாடு தேர்தல் : திமுக: 151 – அதிமுக: 82 – மநீம: 1 ...

தமிழ்நாடு தேர்தல் : திமுக: 151 – அதிமுக: 82 – மநீம: 1 இடங்களில் முன்னிலை

564
0
SHARE
Ad

சென்னை:(மலேசிய நேரம் மாலை 05:40 மணி நிலவரம்) தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி  151 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 82 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மக்கள் நீதி மையம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது, 55,177 வாக்குகள் பெற்று, 87 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் வி.ராமு, 55,090 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.