Home இந்தியா தமிழ்நாடு: துரைமுருகன், எச்.ராஜா பின்னடைவு

தமிழ்நாடு: துரைமுருகன், எச்.ராஜா பின்னடைவு

520
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், சில முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் , கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி. ராமு முன்னிலையில் உள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.

#TamilSchoolmychoice

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவைச் சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் மூர்த்தி அங்கு முன்னிலையில் உள்ளார்.