அந்த தீர்வை அடைவதற்கு பாலஸ்தீனியர்களை ஆதரிப்பவர்கள் சரியான திட்டத்தை வைத்திருப்பது முக்கியம் என்று அவர் தனது முகநூல் கணக்கில் ஒரு நேரடி ஒளிபரப்பில் தெரிவித்தார்.
“சண்டைக்காகவோ அல்லது பழிவாங்குவதற்காகவோ போராடுவது எதையும் பெறப்போவதில்லை,” என்று அவர் கூறினார்.
அரபு உலகமும் பாலஸ்தீனியர்களும் உட்கார்ந்து இஸ்ரேலுக்கு எதிராக நிற்பதற்கான சரியான திட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் மகாதீர் வெளிப்படுத்தினார்.
“தற்போதைய நிலைமைக்கு முஸ்லிம் உலகம் விழித்திருக்கும் என்று நான் நம்புகிறேன், ” என்று அவர் கூறினார்.
பாலஸ்தீனியர்கள் தான் இஸ்ரேலைத் தூண்டிவிடுகிறார்கள் என்று உலகம் கருதுவதாகத் தெரிகிறது, ஆனால் பாலஸ்தீனியர்கள் தங்கள் மசூதியில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, இஸ்ரேலியர்கள் படையெடுத்து அவர்களைத் தாக்கும் முடிவை எடுத்தனர்.
“பிரார்த்தனை செய்யும் மக்கள் யாருக்கும் ஆபத்து அல்ல,” என்று அவர் கூறினார்.