Home இந்தியா சீமானின் தந்தை மறைவு – இரங்கல் செய்திகள் குவிந்தன

சீமானின் தந்தை மறைவு – இரங்கல் செய்திகள் குவிந்தன

724
0
SHARE
Ad

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில்,  மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த தருணத்தில் சீமானின் தந்தையார் செந்தமிழன் மறைந்தார் என்ற சோகச் செய்தியும் வெளிவந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன், சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் நேற்று வியாழக்கிழமை (மே 13) காலமானார்.

சீமானின் தந்தையாரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சீமானின் தந்தையார் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.