Home நாடு கொவிட்-19: நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகபட்ச அளவை நெருங்கிவிட்டன

கொவிட்-19: நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகபட்ச அளவை நெருங்கிவிட்டன

488
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் மலேசியர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகபட்ச அளவை நெருங்கிவிட்டன என்று அது கூறியது.

காஜாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவின் படங்களை அதன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய அமைச்சகம், அம்பாங், செலாயாங் மற்றும் சுங்கை புலோ மருத்துவமனைகளிலும் இதே நிலைமை இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

“இந்த நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இதுதான் நிலைமை. இங்கு நெரிசலாக உள்ளது,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நோன்பு பெருநாள் காலங்களிலும் முன்னணி பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மையில், கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அமைச்சின் இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,113 கொவிட் -19 சம்பவங்களும் 34 இறப்புகள் பதிவாகியுள்ளன.