Home கலை உலகம் விஜய்யின் அடுத்த புதிய படம் “பீஸ்ட்”

விஜய்யின் அடுத்த புதிய படம் “பீஸ்ட்”

803
0
SHARE
Ad

சென்னை : நாளை ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவர் நடிப்பில் அடுத்து வெளிவரப்போகும் புதிய படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

தளபதி 65 என முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்த இந்தப் படம் இப்போது “பீஸ்ட்” (Beast) என்ற தலைப்பில் உருவாகத் தொடங்கும். மோசமாக மிருகம் என்பதற்கான பொருள்தான் பீஸ்ட் என்பதாகும்.

இந்தப் படத்தின் பெயரோடு படத்திற்கான முதல் தோற்றமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நடிகர் விஜய் பனியன் போன்ற உள்ளாடையுடன் கையி்ல் நவீனரக துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் விதத்தில் படத்தின் முதல் தோற்றம் அமைந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஆகக் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்டர். இந்தப் படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்து இயக்கும் படம் என்பதால் விஜய்யின் பீஸ்ட் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.