Home உலகம் ஈரோ 2020 : ஆஸ்திரியா 1 – உக்ரேன் 0

ஈரோ 2020 : ஆஸ்திரியா 1 – உக்ரேன் 0

1415
0
SHARE
Ad

புச்சாரெஸ்ட் (ரோமேனியா) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 21) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “சி” பிரிவில் ஆஸ்திரியா – உக்ரேன் இரண்டு குழுக்களும் மோதின.

ரோமேனியாவின் புச்சாரெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரியா 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் உக்னேரேனைத் தோற்கடித்தது.

இதன் மூலம் “சி” பிரிவில் நெதர்லாந்துக்கு அடுத்து 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை ஆஸ்திரியா பிடித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து குரூப் “சி” பிரிவில் இருக்கும் உக்ரேன், நோர்த் மாசிடோனியா இரண்டு நாடுகளும் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன.

திங்கட்கிழமை நடைபெற்ற (ஜூன் 21) நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள்: