Home உலகம் உலகம் : செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : இத்தாலியைத் தோற்கடிக்குமா இங்கிலாந்து?

உலகம் : செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : இத்தாலியைத் தோற்கடிக்குமா இங்கிலாந்து?

585
0
SHARE
Ad
இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன்…

ஈரோ 2020: இத்தாலியைத் தோற்கடிக்குமா இங்கிலாந்து?

இலண்டன் : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் ஈரோ 2020 இறுதிச் சுற்று ஆட்டத்தில் (மலேசிய நேரப்படி திங்கட்கிழமை ஜூலை 12 அதிகாலை 3.00 மணி) – 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதன் முறையாக ஓர்அனைத்துலக காற்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கும் இங்கிலாந்து – இத்தாலியைத் தோற்கடித்துக் கிண்ணத்தை வாகை சூடுமா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள் காற்பந்து இரசிகர்கள்

கோப்பா அமெரிக்கா : அர்ஜெண்டினா 1-0 கோல் எண்ணிக்கையில் பிரேசிலைத் தோற்கடித்தது

ரியோ டி ஜெனிரோ : இன்று மலேசிய நேரப்படி காலை 7.00 மணிக்கு பிரேசிசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற தென் அமெரிக்காவின் நாடுகள் கலந்து கொள்ளும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான காற்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் உலகின் முன்னணி ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா குழு 1-0 கோல் எண்ணிக்கையில் பிரேசிலைத் தோற்கடித்தது.

அமெரிக்காவில் பரவும் காட்டுத் தீ

வாஷிங்டன் : அமெரிக்காவின் மேற்குப் பகுதி மாநிலங்களில் கொளுத்தும் வெயிலின் வெப்ப நிலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து, பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருகின்றன.

சீனோவேக் தடுப்பூசிகள் போட்டும் தொற்றுகள் பீடித்த மருத்துவ முன்களப் பணியாளர்கள்

#TamilSchoolmychoice

பேங்காக் : தாய்லாந்தில் சீனாவின் தயாரிப்பான சீனோவேக் கொவிட் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்ட நூற்றுக்கணக்கான முன்களப் பணியாளர்களுக்கு மீண்டும் கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பதால், மூன்றாவது ஊக்கத் தடுப்பூசிகளை (பூஸ்டர்) அவர்களுக்கு செலுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்குப் பயணம் சென்றார்

பிரிட்டனின் முக்கிய வணிகப் பிரமுகரான ரிச்சர்ட் பிரான்சன் தனது வாழ்நாள் கனவைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இன்று சிறப்பு விண்கலத்தில் விண்வெளிக்குப் புறப்பட்டுச் சென்றார்.