கோலாலம்பூர்: மொகிதின் யாசின் அமைச்சரவையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சராக இருந்த அனுவார் மூசா தற்போது தொடர்பு, பல்ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாட்டின் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களை உள்ளடக்கிய தொடர்பு, பல்ஊடக அமைச்சு பரப்புரைக்கான முக்கியக் களமாகப் பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே அம்னோவைச் சேர்ந்த அனுவார் மூசா அந்த அமைச்சுப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.
ஏற்கனவே தொடர்பு பல்ஊடக அமைச்சராக இருந்த பெர்சாத்து கட்சியின் சைபுடின் அப்துல்லா புதிய அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கிளந்தான் மாநிலத்தின் கெத்தெரே நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான அனுவார் மூசா, இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் கடுமையாகப் பாடுபட்டவர்களில் ஒருவராவார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal