Home நாடு கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி இல்லை – தனி இலாகாவாக மட்டுமே செயல்படும்

கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி இல்லை – தனி இலாகாவாக மட்டுமே செயல்படும்

472
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த பல ஆண்டுகளாக தனி அமைச்சாகச் செயல்பட்டு வந்த கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி தனி இலாகாவாக செயல்படும். இந்த முடிவை பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இன்று கோலாலம்பூரிலுள்ள மாநகர் மன்ற அலுவலகத்திற்கு அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலியுடன் அன்வார் வருகை தந்து மாநகர் மன்ற அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி தனி இலாகாவாக பிரதமர் துறையின் கீழ் செயல்படும்.

பின்னர் கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றையும் அன்வார் நடத்தினார்.