Home Photo News இராமசாமியின் தமிழ் நாட்டு வருகை

இராமசாமியின் தமிழ் நாட்டு வருகை

749
0
SHARE
Ad
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இராமசாமி, சத்தீஸ் முனியாண்டி, டேவிட் மார்ஷல்

சென்னை : தமிழ் நாட்டுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி, தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையும், வணிகப் பிரமுகர்களையும் சந்தித்து உரையாடினார்.

மல்லை சத்யாவுடன் (இடம்) இராமசாமி

கடந்த திங்கட்கிழமை டிசம்பர் 19-ஆம் தேதி சென்னை வந்தடைந்த அவரையும் அவரின் குழுவினரையும் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவும் மற்ற உள்ளூர் பிரமுகர்களும் மாலை அணிவித்து வரவேற்பு நல்கினர்.

தனது வருகையின் ஒரு பகுதியாக இராமசாமி, மதிமுக தலைவர் வைகோவை காலை உணவின்போது சந்தித்து உரையாடினார்.

#TamilSchoolmychoice

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தமிழ் நாட்டு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனையும் இராமசாமி சந்தித்து தமிழ் நாட்டுக்கும், மலேசியாவுக்கும், குறிப்பாக பினாங்குக்கும்  இடையிலான வர்த்த உறவுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

தமிழ் நாட்டு வணிகப் பிரமுகர்களுடனான வட்ட மேசை கலந்துரையாடல் ஒன்றையும் இராமசாமி நடத்தினார். அந்தக் கலந்துரையாடலில் பினாங்கு மாநிலத்தில் முதலீடு செய்ய தமிழ் நாட்டு வணிகர்களுக்கு அழைப்பு விடுத்த இராமசாமி, பினாங்கு மாநிலத்தில் உள்ள வர்த்தகத் தொழில் துறை வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்தார்.

இராமசாமியின் குழுவில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டியும், செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.

அதன் பின்னர் தமிழ் நாட்டின் தொழில் நகரான கோயம்புத்தூருக்கும் இராமசாமி வருகை மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.

அங்கு தன் பூர்வீக ஊரான வெள்ளக் கோவிலுள்ள இலுப்பைக் கிணறு கிராமத்திற்கும் இராமசாமி வருகை தந்தார். தன் தாயார் இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றும் 1920-ஆம் ஆண்டுகளில் மலேசியாவுக்கு அவர் குடியேறினார் என்றும் இராமசாமி தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார்.