Home கலை உலகம் ஆஸ்ட்ரோவின் டிசம்பர் விடுமுறைச் சிறப்பு நிகழ்ச்சிகள் – விண்மீன் அலைவரிசை 202-இல் கண்டு மகிழுங்கள்

ஆஸ்ட்ரோவின் டிசம்பர் விடுமுறைச் சிறப்பு நிகழ்ச்சிகள் – விண்மீன் அலைவரிசை 202-இல் கண்டு மகிழுங்கள்

706
0
SHARE
Ad

astro-vinmeen-logo-01072021இந்த டிசம்பரில் விடுமுறைச் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு மகிழுங்கள்

கோலாலம்பூர் – இசை நிகழ்ச்சியானக் கிறிஸ்துமஸ் மியுசிகல் வித் பென்னி ஜான் ஜோசப், திறமைகளுக்கானத் தேடலான அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 மற்றும் திரில்லர் திரைப்படமான O2 ஆகிய விடுமுறைச் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் இந்த டிசம்பரில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

இறைப்பாடல் பாடகர், வழிபாட்டுத் தலைவர், பாடலாசிரியர் மற்றும் இசைத் தயாரிப்பாளரானப் பென்னி ஜான் ஜோசப் தயாரித்த பிரபலமான இறைப் பாடல்களை இசை நிகழ்ச்சியானக் கிறிஸ்துமஸ் மியுசிகல் வித் பென்னி ஜான் ஜோசப் வழங்கும்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் இன்னும் அதிகமாய், எந்தன் இதயத்தை, பாதிரர் நீரே, தேவனின் நண்பன் மற்றும் பரலோகத் தேவனே உள்ளிட்ட 10 பிரபலமானப் பாடல்கள் இடம்பெறும்.

கிறிஸ்துமஸ் மியுசிகல் வித் பென்னி ஜான் ஜோசப், நிகழ்ச்சியை டிசம்பர் 25, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

மேலும், வாடிக்கையாளர்கள் திறமைகளுக்கானத் தேடலான அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

இவ்வாண்டு ஜோகூர் பாரு, பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகள் மற்றும் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிச் சுற்று ஆகியவற்றின் காட்சிகளை இந்த நிகழ்ச்சி வழங்கும்.

சாம்பியனாக மகுடம் சூடப்பட்ட வெற்றியாளர் 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் சென்றதோடு ஆஸ்ட்ரோவில் தொகுப்பாளராகப் பணியைத் தொடங்கும் வாய்ப்பையும் பெற்றார்.

அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 நிகழ்ச்சியை டிசம்பர் 25 மற்றும் 26, மாலை 4 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம்.

ஜி.எஸ். விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, ரித்விக் ஜோதி ராஜ் மற்றும் பரத் நீலகண்டன் நடித்துள்ள O2 திரில்லர் திரைப்படத்தையும் வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம். நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் பார்வதி, தன் மகன் வீராவின் உடலுக்குள் பிராணவாயுவைச் செலுத்த முயற்சி செய்வதைப் பற்றிய கதை. வாடிக்கையாளர்கள் O2 திரைப்படத்தை டிசம்பர் 26, இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.