Home Photo News ஸ்டாலினுடன் இராமசாமி சந்திப்பு

ஸ்டாலினுடன் இராமசாமி சந்திப்பு

895
0
SHARE
Ad

 

சென்னை : தமிழ் நாட்டுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரின் அலுவலகத்தில் சந்தித்தார்.

இராமசாமியுடன் பினாங்கு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் ஆகியோரும் இந்த வருகையில் இணைந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஸ்டாலினுடன் இராமசாமி நடத்திய சந்திப்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் நாட்டுக்கும் பினாங்குக்கும் இடையில் நேரடி விமான பயண சேவை தேவை என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

வர்த்தக முதலீடுகள், இரு நாடுகளுக்கும் தேவையான அடிப்படை வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும் ஸ்டாலினுடன் இராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தச் சந்திப்பின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: