Home நாடு ரமேஷ் ராவ், சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன் சிறப்பு அதிகாரியாக நியமனம்

ரமேஷ் ராவ், சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன் சிறப்பு அதிகாரியாக நியமனம்

501
0
SHARE
Ad
ரமேஷ் ராவ்

கோலாலம்பூர் : துணைப் பிரதர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன்களுக்கான சிறப்பு அதிகாரியாக ரமேஷ் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரமேஷ் ராவ் நீண்ட காலமாக தேசிய முன்னணியில் ஆதரவாகத் திகழ்கிறார்.

நாடு முழுவதிலும் உள்ள இந்தியர் பிரச்சனைகளை ரமேஷ் ராவ் கவனிப்பார் என்றும் சாஹிட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஷா ஆலாம் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்தியர் சந்திப்பு நிகழ்ச்சியில் சாஹிட் கலந்து கொண்டார். அந்த ஆலயத்தின் ஆலோசகராக ரமேஷ் செயல்படுகிறார்.

இந்தியர் பிரச்சனைகளில் தீர்வு காண முடியாவிட்டால் இனிமேல் தன்னையோ, பிரதமர் அன்வார் இப்ராகிமையோ குறை கூறாமல் ரமேஷ் ராவைத்தான் கேட்க வேண்டும் என சாஹிட் நகைச்சுவையாகக் கூறினார்.