Home நாடு ஷாஹிடான் காசிம் : கூட்டரசுப் பிரதேச அமைச்சராகச் சாதிப்பாரா?

ஷாஹிடான் காசிம் : கூட்டரசுப் பிரதேச அமைச்சராகச் சாதிப்பாரா?

541
0
SHARE
Ad
Shahidan Kassim
டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம்

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 30) பதவியேற்கும் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவையில் இடம் பெறும் புதியவர் ஷாஹிடான் காசிம்.

மொகிதின் யாசின் அமைச்சரவையில் இடம் பெறாதவர் என்ற அளவில்தான் இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவையில் புதிய முகமே தவிர, மற்றபடி அரசியலில் “பழம் தின்று கொட்டை போட்டவர்” கணக்காக மிகப் பழைய முகம் ஷாஹிடான் காசிம்.

கூட்டரசுப் பிரதேச அமைச்சராகப் பொறுப்பேற்கிறார் ஷாஹிடான் காசிம்

#TamilSchoolmychoice

அம்னோ அரசியலில் சர்ச்சைக்குரிய தலைவர் ஷாஹிடான் காசிம். பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான ஆராவ் தொகுதியைப் பிரதிநிதிப்பவர்.

70 வயதான இவர் கூட்டரசுப் பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பல கடந்த கால சர்ச்சைகளில் சிக்கிய இவர், 70-வது வயதில் அமைச்சரவைக்குத் திரும்பியிருப்பது கண்டனங்களை எழுப்பியிருக்கிறது.

அதிலும், கூட்டரசுப் பிரதேசம் என்பது பல்வேறு அன்றாடப் பிரச்சனைகளைக் கொண்டது. நிறைய அளவில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டது.

இந்தப் பணியில் ஷாஹிடான் காசிம் வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal