Home கலை உலகம் “ஜீ” தமிழ் அலைவரிசையில் உச்சகட்ட சவால்களை கொண்ட “சர்வைவர்”

“ஜீ” தமிழ் அலைவரிசையில் உச்சகட்ட சவால்களை கொண்ட “சர்வைவர்”

846
0
SHARE
Ad

தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில்  ஜீ தமிழ் மூலமாக முதல் முறையாக உச்சகட்ட சவால்களை கொண்ட “சர்வைவர்” ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

சென்னை: முன்னணி தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையான – ஜீ தமிழ், தமிழ் தொலைக்காட்சித் துறையில் முத்திரை பதித்த பல பிரபல மற்றும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றதாகும்.

தென் இந்திய தொலைக்காட்சிகளின் வரலாற்றில் முதல் முறையாக ரியாலிட்டி, டிராமா மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை இதுவரை காணாத வகையில் மிகச்சிறப்பாக தனித்துவமாக ஒருங்கிணைத்து, உலகின் மிகவும் சவாலான தொடரான – ‘சர்வைவர்’ மூலம் ஒளிபரப்பவுள்ளது.

#TamilSchoolmychoice

பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான பானிஜே ஏசியா (Banijay Asia), உலகளவில் வெற்றிகரமாக இயங்கி வருவதற்கு, இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு பன்னாட்டு தழுவலிலும் பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வருவதே சான்றாகும். இதனால் உலகெங்கும் இந்நிகழ்ச்சிக்கு தீவிர இரசிகர் கூட்டம் உள்ளது.

நிகழ்ச்சியின் தனித்தன்மை யாதெனில் இயற்கையான சூழல் என்பது மட்டுமல்லாமல், இந்நிகழ்ச்சி ஓர் அற்புதமான தீவில் நிகழவுள்ளதால் இந்நிகழ்ச்சிக்கும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் இது ஒரு தனித்துவமான அனுபவத்தினைத் தரும். இந்நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் இயற்கையின் ஆற்றலுக்கு எதிராக தங்களது திறனை வெளிப்படுத்தி போராட வேண்டும். உடல் வெப்பத்திற்காக தீ மூட்டுவது, அல்லது இயற்கை பொருட்களைக் கொண்டு ஒரு குடில் அமைப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் துவங்கி, உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியங்களைத் தேடிப் பெறுவது உள்ளிட்ட சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

இந்த சூழலை மேலும் கடுமையாக்கும் விதமாக போட்டியாளர்களுக்கு, பல்வேறு விதமான சவால்கள் கொடுக்கப்படும், ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு அதற்கான பரிசுகளை வென்று, போட்டியிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்களைக் காத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு போட்டியாளரின் மன மற்றும் உடல் வலிமையை அனைத்து விதத்திலும் சோதித்து, மனிதனின் எல்லா விதமான சவால்களை எதிர்கொள்ளும் திறனை கண்டறிவதற்கே இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பின்னணியைச் சேர்ந்த பலவகையான போட்டியாளர்களை அறிமுகம் செய்வதில் துவங்கும் இந்நிகழ்ச்சியினை நடத்தப்போகும் பிரபலம் அனைவருக்கும் ஒரு கூடுதல் ஆச்சரியமாக இருப்பார்.

மேலும் அவர், இந்த கடுமையான சவால்களைக் எதிர்கொண்டு வாழும் பயணத்தில் தொலைக்காட்சி நேயர்களை அழைத்து செல்வது மட்டுமன்றி, போட்டிகளின்போது போட்டியாளர்களுக்கும் ஒரு அறிவுரையாளராகவும், வழிகாட்டியாகவும் இருப்பார்.

இது குறித்து ஜீ அலைவரிசையின் அதிகாரி திருமதி த்ரிப்தா சிங் கூறுகையில், “சர்வைவ்வர் நிச்சயமாக ஓர் சிறந்த ரியாலிட்டி ஷோ வடிவங்களில் இருக்கும், குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற சந்தைகளில், புதிய நகர்ப்புற பார்வையாளர்களுடன் புதிய அளவுகோல்களை அமைக்கும்.

அவர் மேலும் கூறியதாவது, “ஒரு சேனலாக, எங்கள் பார்வையாளர்களை புதுமையான கன்டென்ட் மற்றும் ரியாலிட்டி பொழுதுபோக்குகளில் பலவகைகளில் ஈடுபடுத்தவும் மகிழ்விக்கவும் நாங்கள் எப்போதும் உறுதியளித்துள்ளோம். சர்வைவர் நிச்சயமாக இந்தியாவில் ரியாலிட்டி ஷோ வடிவங்களில் புதிய வரையறைகளை உருவாக்கும். தயாரிப்பு மதிப்பீடு முதல் பல்வேறு வகையான தனித்திறமைகள் வரை, அனைத்திலும் ஜீ தமிழ் சேனல், பானிஜே நிறுவனத்துடன் தொலைக்காட்சித் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தினை உயர்த்தும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றார்.

இதுகுறித்து பேசிய பானிஜே ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி & நிறுவனரான திரு. தீபக் தர் அவர்கள், “சர்வைவர் உலகெங்கிலும் தனக்கென இரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும். இதன் அமைப்பே தனித்துவமானதாகவும், மாற்றத்தக்கதாகவும் உள்ளது. மேலும் இது அனைத்து விதமான நேயர்களின் உணர்வுகளோடும் பொருந்தக்கூடிய தன்மையுள்ள ஒரு நிகழ்ச்சியாகும். தமிழ் தொலைக்காட்சிகள் எப்போதுமே வித்தியாசமான புதுமைகளை திரையில் காண்பிக்கும் இயல்பு கொண்டவை. இது போன்ற ஒரு ரியாலிட்டி ஷோ இவ்வகையான நிகழ்ச்சிகளை மேலும் விரிவாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. நிகழ்ச்சிகளில் புதுமை என்று எடுத்துக்கொண்டால் அதில் எப்போதும் ஒரு படி மேலே இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

சர்வைவர் நிகழ்ச்சி தொடர்பான விளம்பரங்கள் விரைவில் தொடங்கப்பட்டு, ஜீ தமிழ் சேனலில் வர இருக்கிறது . நிகழ்ச்சியின் தொகுப்புகளையும், நிகழ்ச்சியின் தணிக்கைச செய்யப்படாத சுவாரசிய காணொலிகளையும், ஜீ தொலைக்காட்சிக்கான கட்டண வலைத் திரை (OTT ) தளமான ZEE5 இல் காணலாம்.

இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் ஜீ தமிழ் APAC சப்ஸ்க்ரைப் செய்து சர்வைவர் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்!

ஜீ தமிழ் APAC


ஜீ தமிழ் சேனல் – ஜீ எண்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் ஒரு பொது பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சி சேனலாகும்.

அக்டோபர் 2008-ல் துவங்கப்பட்ட ஜீ தமிழ், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவருகிறது. நாடகத் தொடர்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு நிகழ்ச்சிகளென இந்த தொலைக்காட்சி பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கி, ஒவ்வொரு குடும்பத்திலும் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமானவற்றை ஒரே இடத்தில் தரும் சேனலாக திகழ்கிறது.

மிஸ்டர் & மிஸ்ஸஸ் கில்லாடிஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ், ச ரி க ம ப மற்றும் ராக்ஸ்டார் போன்ற பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை ஜீ தமிழ் தனித்துவமாகவும், இதுவரை கண்டிராத வகையிலும் ஒளிபரப்பி, அனைத்து வயதினரையும் தன்வசம் ஈர்த்துள்ளது.

எல்லாவிதமான களங்களையும், நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பினையும் அளித்துவருவதால், ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் உள்ள தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல்களில் வேகமாக வளர்ந்து வரும் சேனல்களில் ஒன்றாகியுள்ளது.

தனிப்பயனாக்கப்பட்ட APAC ஊட்டத்துடன் ஜீ தமிழ் ஆசியா பசிபிக்கிலும் கிடைக்கிறது. ஜீ தமிழ் APAC சிங்டெல் டிவியில் அலைவரிசை எண்:632 வழியாகவும் ஸ்டார்ஹப்பில் அலைவரிசை எண் 138 வழியாகவும் கிடைக்கிறது.

மலேசியாவில் ஆஸ்ட்ரோ, அலைவரிசை எண் 223 வழியாகவும் ஜீ அலைவரிசையைப் பார்த்து இரசிக்கலாம்.

ஏபிஏசி பார்வையாளர்கள் OTT இயங்குதளம் ZEE5 வழியாக ஜீ தமிழ் APAC நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும். ஜீ தமிழ் APAC கடந்த 5 ஆண்டுகளில் உள்ளூர் நிகழ்வுகள், ஈடுபாடு மற்றும் உள்ளடக்க உருவாக்கம் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ளூர் பார்வையாளர்களை  தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது.

இந்த ஆண்டு தொற்றுநோய் தாக்கம் இருந்தபோதிலும், நாங்கள் 2 வெற்றிகரமான நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளோம்.

ஜீ ரீல், குறும்பட தயாரிப்பாளர்களுக்கான ஓர் குறும்பட போட்டி மற்றும் இளம் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளம் ஜீ சேம்ப்ஸ். இந்த இரண்டு போட்டிகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. இரண்டு போட்டிகளின் முடிவுகளும் அனைத்துலக நடுவர் குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.

ஜீ தமிழ் APAC சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள 400 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சென்றடைகிறது, மேலும் நாங்கள் தொடர்ந்து சிறந்த தமிழ் பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறோம்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal