Home கலை உலகம் ஸீ தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் தேர்வு பெற்ற மலேசியப் பெண் அருளினி

ஸீ தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் தேர்வு பெற்ற மலேசியப் பெண் அருளினி

905
0
SHARE
Ad

ஸீ தொலைக்காட்சியின் புகழ் பெற்ற சரிகமப பாடல் திறன் நிகழ்ச்சிக்கான தேர்வுப் போட்டியில் பங்கேற்ற மலேசியப் பெண் அருளினி தேர்வாகி மலேசியக் கலைஞர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ்நாட்டின் தொலைக்காட்சி ஊடகங்களில் பொதுமக்களின் பாடல் திறனை  ஊக்குவிக்கும் – அடையாளம் காணும் – வகையில் போட்டி நிகழ்ச்சிகள் நிறைய அளவில் நடத்தப்படுகின்றன. ஏறத்தாழ ஒவ்வொரு தொலைக்காட்சி ஊடகத்திலும் ஒரு பாடல் திறன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரபல ஸீ தொலைக்காட்சி அலை வரிசையில் சரிகமப என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முறை நடத்தப்படுவது 4-வது தொடருக்கான (சீசன்) நிகழ்ச்சியாகும்.

#TamilSchoolmychoice

அண்மையக் காலமாக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து தமிழர்களை பங்குபெறச் செய்து ஊக்குவிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு போட்டியில் ஸீ தொலைக்காட்சியின் சரிகம்ப நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகி இருக்கிறார் . மலேசியாவின்ன் அருளினி.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஆஸ்ட்ரோவின் பிக் ஸ்டேஜ் நிகழ்ச்சியில் முதலாவதாக வந்து வெற்றி வாகை சூடியவர் இதே அருளினிதான்.

அவர் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு பெறுவதாக சரிகமப நிகழ்ச்சியின்  நீதிபதிகளில் ஒருவரான பிரபல பாடகர் சீனிவாஸ் அறிவித்த போது உணர்ச்சி மிகுதியால் அருளினி கண் கலங்கினார்.

ஸீ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒன்றாக ஒளிபரப்பு காண்கிறது. இந்தப் போட்டி நிகழ்ச்சியில் ஒரு மலேசியப் பெண் தேர்வாகி இருப்பதை தொடர்ந்து இந்த சரிகமப நிகழ்ச்சியை பின்பற்றும் மலேசிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அருளினியின் தாயார் கல்வித்துறை வட்டாரங்களில் பிரபலமான ஆசிரியரான கஸ்தூரி ராமலிங்கம் ஆவார். அவர் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை, பல கல்வி மாநாடுகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் படைத்திருக்கிறார்.

இளையோருக்கான தாய் மொழி கல்வி கற்பிக்கும் புத்தாக்க முயற்சிகளையும் இது தொடர்பான ஆய்வுகளையும் கஸ்தூரி இராமலிங்கம் மேற்கொண்டு இருக்கிறார்.