Home நாடு கோலகுபு பாரு : முன்கூட்டிய வாக்குப் பதிவு தொடங்கியது

கோலகுபு பாரு : முன்கூட்டிய வாக்குப் பதிவு தொடங்கியது

639
0
SHARE
Ad

கோலகுபுபாரு : சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு இன்று (மே 7) காலை தொடங்கியது.

இராணுவத்தினர், காவல் துறை அதிகாரிகள், தேர்தல் பணியாளர்களுக்கு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக வாக்களிப்பு நடத்தப்படும். அதற்கான வாக்களிப்பு இன்று நடத்தப்பட்டது. இதற்காக 2 வாக்களிப்பு மையங்கள் தொடங்கப்பட்டன.

கோலகுபுபாரு தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜசெகவின் பாங் சோக் தாவ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பிலும் கைருல் அசாரி சாவுட் பெரிக்காத்தான் கூட்டணி சார்பிலும் களம் காண்கின்றனர். கைருல் பெர்சாத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி தலைவராவார்.

#TamilSchoolmychoice

பார்ட்டி ராயாட் மலேசியா சார்பில் ஹாஃபிசா சைனுடின் போட்டியிடுகிறார். நியாவ் கே சின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

ஜசெக வேட்பாளர் பாங் சோக் தாவ் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்-கின் பத்திரிகைச் செயலாளர் ஆவார். 31 வயதான பாங் சோக் தாவ் அம்பாங் வட்டாரத்தைச் சேர்ந்தவர். யூனிடென் என்னும் தெனாகா நேஷனல் பல்கலைக் கழகத்தின் மின்சாரம், மின்னியல் துறை பட்டதாரியான பாங் 2018-2020 காலகட்டத்தில் தொழில்நுட்பம்,  சுற்றுச்சூழல் அமைச்சரின் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். 2020-2022 காலகட்டத்தில் ஜசெக பிரச்சார ஊடகமான ஊபா டிவி என்னும் ஊடகத்தின் உதவித் தயாரிப்பாளராக செயல்பட்டார்.