Home நாடு துன் மகாதீர் கைதா? இப்போதைக்கு இல்லை என்கிறார் அசாம் பாக்கி!

துன் மகாதீர் கைதா? இப்போதைக்கு இல்லை என்கிறார் அசாம் பாக்கி!

386
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : துன் மகாதீர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் இப்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அவர் மீதான விசாரணைகள் இன்னும் தொடர்ந்து வருவதாகவும் அசாம் பாக்கி இன்று செவ்வாய்க்கிழமை (மே 7) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்கு உட்பட்டவர்கள் தாங்கள் அல்ல என்றும் தங்களின் தந்தை துன் மகாதீரைக் குறி வைத்துத்தான் அந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் இரு மகன்கள் அண்மையில் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

தங்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என டான்ஸ்ரீ மொக்சானி மகாதீர் மற்றும் மிர்சான் மகாதீர் இருவருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

“எங்கள் தந்தை துன் டாக்டர் மகாதீர் முகமட் எங்களின் செல்வத்தை வளப்படுத்த பிரதமர் பதவியை அதிகார விதி மீறலுக்குப் பயன்படுத்தினாரா என்பதை தீர்மானிப்பதே ஊழல் தடுப்பு ஆணையத்தின் இலக்கு என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம், மேலும் பல ஆண்டுகளாக நாங்கள் சம்பாதித்ததெல்லாம் முறையான வழிகள் மூலமாக சம்பாதிக்கப்பட்டவை என்பதையும், எந்தக் குற்றத்தையும் நாங்கள் இழைக்கவில்லை என்பதையும் நிரூபிக்க விரும்புகிறோம்” என்றும் அவர்கள் அண்மையில் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.

மகாதீர் விசாரிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 26 அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.