Home உலகம் இஸ்ரேல், ராஃபா நகர் மீது தாக்குதல் – 16 பேர் பலி

இஸ்ரேல், ராஃபா நகர் மீது தாக்குதல் – 16 பேர் பலி

619
0
SHARE
Ad

டெல் அவில் : இஸ்ரேல் – ஹாமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் வேளையில், ஹாமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 3 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல், காசா பகுதியில் உள்ள ராஃபா நகர் மீது தாக்குதல் நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து காசாவுக்குள் செல்லும் கெரெம் ஷாலோம் என்ற எல்லைப் பகுதி மூடப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 5) இந்த பதில் தாக்குதலை நடத்தியது.

#TamilSchoolmychoice