Home Photo News ஆஸ்ட்ரோவின் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் மாபெரும் வெற்றியாளராக ‘ரூஹன்’ மகுடம் சூடினார்!

ஆஸ்ட்ரோவின் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் மாபெரும் வெற்றியாளராக ‘ரூஹன்’ மகுடம் சூடினார்!

325
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் கண்ட ஆஸ்ட்ரோவின் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் மாபெரும் இறுதி அத்தியாயத்தைத் தொடர்ந்துப் பகாங்கைச் சேர்ந்த ரூஹன் வெற்றியாளராக மகுடம் சூட்டப்பட்டார்.

இசைக் களியாட்டமும் அற்புதமான நிகழ்ச்சிகளும் நிரம்பிய மறக்க முடியாத அவ்விரவில் யாசஸ்கரன் இரண்டாம் நிலை வெற்றியாளராகவும் திவ்யா முன்றாம் நிலை வெற்றியாளராகவும் வாகைச் சூடினர்.

இறுதிச் சுற்றின் இரண்டாவது சுற்றுக்கான ஆறுதல் பரிசுகளை யோஷினி மற்றும் நித்தியன் ஆகியோரும் முதலாவது சுற்றுக்கான ஆறுதல் பரிசுகளை நேசன் மற்றும் பெர்ம சந்திரா ஆகியோரும் வென்றனர். ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் வழியாக ஏப்ரல் 22 முதல் 28 வரை நடைபெற்ற பொது வாக்களிப்பைத் தொடர்ந்து மிகவும் பிரபலமானவர் விருதை நித்தியன் தட்டிச் சென்றார்.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “சீசன் முழுவதும் அர்ப்பணிப்பையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி பிக் ஸ்டேஜ் தமிழ்-இன் இரண்டாம் சீசனின் மாபெரும் வெற்றியாளராக வாகைச் சூடிய ரூஹனுக்கு இவ்வேளையில் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம். வெற்றிப் பெற்ற பிறப் போட்டியாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறோம். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் சர்வதேச இசை அரங்கங்களில் உள்நாட்டுத் திறமையாளர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தி நட்சத்திரமாகப் பிரகாசிக்க உதவும் வண்ணமாக அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான எங்களின் தொடர்ச்சியான முயற்சியை உறுதிப்படுத்தும் விதமாக முதல் மற்றும் இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் ராக்கெட்பியூல் என்டர்டெயின்மென்ட்-இன் (Rocketfuel Entertainment) திறமையாளர்களாகும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதைப் பெருமையுடன் அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

குக்கூ நிதி ஆதரவாளராகத் திகழ்ந்த இப்போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வென்றதோடுக் குக்கூ தயாரிப்புகளையும் வீட்டிற்குத் தட்டிச் சென்றனர்:

முதல் நிலை வெற்றியாளர்: 50,000 ரிங்கிட், குக்கூ கிராண்டே நீர் சுத்திகரிப்பான் (Cuckoo Grande Water Purifier) மற்றும் ராக்கெட்பியூல் என்டர்டெயின்மென்ட்-இன் (Rocketfuel Entertainment) திறமையாளராகும் ஓர் அரிய வாய்ப்பைப் பெற்றார்;

இரண்டாம் நிலை வெற்றியாளர்: 25,000 ரிங்கிட், குக்கூ யு மாதிரிக் காற்றுச் சுத்திகரிப்பான் (Cuckoo U Model Air Purifier) மற்றும் ராக்கெட்பியூல் என்டர்டெயின்மென்ட்-இன் (Rocketfuel Entertainment) திறமையாளராகும் ஓர் அரிய வாய்ப்பைப் பெற்றார்;

மூன்றாம் நிலை வெற்றியாளர்: 10,000 ரிங்கிட் மற்றும் குக்கூ பி10 பிரஷர் மல்டி குக்கர் (Cuckoo P10 Pressure Multi-Cooker)-ஐ வென்றார்;

மிகவும் பிரபலமானவர் விருது: 10,000 ரிங்கிட் மற்றும் குக்கூ கே மாதிரிக் காற்றுச் சுத்திகரிப்பான் (Cuckoo K Model Air Purifier)-ஐ வென்றார்; மற்றும்
ஆறுதல் பரிசுகள்:

இறுதிச் சுற்றின் 2 போட்டியாளர்கள் (சுற்று 2): ஒவ்வொருவரும் தலா 5,000-ரிங்கிட்டை  வென்றனர்; மற்றும்

இறுதிச் சுற்றின் 2 போட்டியாளர்கள் (சுற்று 1): ஒவ்வொருவரும் தலா 3,000-ரிங்கிட்டை வென்றனர்

இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் முதன்மை நடுவரான மனோ உடன் இணைந்துப் பாடுவதற்கானப் பொன்னான வாய்ப்பை ஒரு பிரத்தியேகச் சுற்றின் மூலம் சிறந்த 3 போட்டியாளர்களுக்கு வழங்கியது, புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளர்களான செயிண்ட் டிஎஃப்சி மற்றும் விக்கி தொகுத்து வழங்கிய இந்த மாபெரும் இறுதிச் சுற்று.

போட்டியாளர்களின் கனவு நனவானத் தருணத்தில் ‘காட்டு குயிலே’பாடலின் மூலம் இரசிகர்களைக் கவர்ந்தார் ரூஹன், ‘ஏ ராஜா’ பாடலை யாசஸ்கரன் பாட, திவ்யா ‘பாசமுள்ள பாண்டியரே’ பாடலின் மூலம் பார்வையாளர்களை இசைப் பரவசத்தில் ஆழ்த்தினார். அதுமட்டுமின்றி, தனது பசுமையான மற்றும் ஹிட் பாடல்களில் ஒன்றானத் ‘துளியிலே’ பாடலைப் பாடிய மனோவின் அற்புதமானப் படைப்பு ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் இறுதிச் சுற்றுக்கு மேலும் மெருகூட்டியது.

பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியானப் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் அத்தியாயங்களைக் கண்டு மகிழ இப்போதே ஆஸ்ட்ரோ பிரைமரி தொகுப்பின் சந்தாதாரராகுங்கள். பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு www.astroulagam.com.my/BigStageTamilS2 எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.