Home நாடு சரவாக் துணை முதல்வருக்கும் கொவிட்-19 தாக்கம் – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சரவாக் துணை முதல்வருக்கும் கொவிட்-19 தாக்கம் – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

602
0
SHARE
Ad

கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் துணை முதல்வர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் சரவாக் மாநிலத்தின் பாலே (Baleh) சட்டமன்ற உறுப்பினருமாவார். அவர் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளார். எனினும் அவர் பெற்றது எந்த இரக தடுப்பூசி என்பது அறிவிக்கப்படவில்லை.

சரவாக்கில் பெரும்பாலானவர்களுக்கு சீனோவேக் என்ற சீன நாட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இந்த இரக தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவானதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal