Home கலை உலகம் “விஜய் மக்கள் இயக்கம்” கலைக்கப்பட்டது

“விஜய் மக்கள் இயக்கம்” கலைக்கப்பட்டது

1066
0
SHARE
Ad

சென்னை : நடிகர் விஜய் பெயரில் தொடங்கப்பட்ட “விஜய் மக்கள் இயக்கம்” கலைக்கப்பட்டு விட்டதாக, விஜய்யின் தந்தையார் எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தனது இரசிகர் மன்றத்தினரோடு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இறுதியில் அப்படி எதுவும் நிகழவில்லை.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலாக விஜய்யின் தந்தையாரும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், “விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் அமைப்பொன்றை பதிவு செய்தார்.

ஆனால், அந்த இயக்கத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என விஜய் அறிக்கை விட்டார்.

இதனால், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பிணக்கு இருப்பதாகவும், அரசியல் பங்கெடுப்பு குறித்த கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் இடையில் இருப்பதாகவும் ஆரூடங்கள் எழுந்தன.

இந்நிலையில், தனது தந்தையாரும், தாயாரும் தனது பெயரைப் பயன்படுத்தி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.ஏ சந்திரசேகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் மன்றத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை என்றும் சந்திரசேகர் நீதிமன்ற மனுவில் தெரிவித்திருக்கிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal