Home உலகம் கட்டாயத் தொழிலாளர்கள் : மலேசியாவின் சூப்பர்மேக்ஸ் தயாரிப்புகளுக்கு கனடா தடை

கட்டாயத் தொழிலாளர்கள் : மலேசியாவின் சூப்பர்மேக்ஸ் தயாரிப்புகளுக்கு கனடா தடை

705
0
SHARE
Ad

ஒட்டாவா (கனடா) : மலேசியாவில் இரப்பர் கையுறைகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் சூப்பர் மேக்ஸ் (Supermax Corp). இந்த நிறுவனத்தில் கட்டாயத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை கனடாவில் இறக்குமதி செய்வதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவும் இதே போன்றதொரு முடிவை அறிவித்தது. தற்போது சூப்பர்மேக்ஸ் நிறுவனம் தொடர்பான தணிக்கை ஆய்வு அறிக்கை மேற்கோள்ளப்பட்டு வருவதாகவும் அதன் முடிவுகள் தெரிய வந்ததும் கனடா மேற்கொண்டு அடுத்த கட்ட இறுதி முடிவுகளை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கனடாவின் சூப்பர்மேக்ஸ் பிரிவின் முடிவுகளுக்காகவும் தகவல்களுக்காகவும் காத்திருப்பதாகவும் கனடா அரசாங்கத்தின் அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

தொழிலாளர்களை முறைகேடாகப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை கனடா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

கையுறைகள், மருத்துவப் பொருட்கள் தயாரிக்கும் மலேசிய நிறுவனங்கள், செம்பனை எண்ணெய் தொழிற்சாலைகள் தொடர்ந்து இதுபோன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றன.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் வகுத்திருக்கும் தொழிலாளர் சட்டங்கள், கட்டாயத் தொழிலாளர்கள் புகார்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மலேசியத் தொழிற்சாலைகளின் பொருட்கள் சில அந்நிய நாடுகளால்  தடை செய்யப்பட்டு வருகின்றன.