Home உலகம் ஓமிக்ரோன் : ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் இரத்து

ஓமிக்ரோன் : ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் இரத்து

609
0
SHARE
Ad

வாஷிங்டன் : கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஓமிக்ரோன் என்ற புதிய தொற்றுப் பரவல் குறித்த அபாயம் ஆகியவை காரணமாக நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 27) ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் உலகம் எங்கிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இரத்து செய்யப்பட்ட 2,200 விமானப் பயணங்களில் 700 பயணங்கள் அமெரிக்காவுக்குள் செய்யப்படவிருந்த பயணங்களாகும்.

மேலும் 3 ஆயிரம் விமானப் பயணங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் ஆண்டுதோறும் விமான நிறுவனங்களுக்கு ஏராளமான பயணச் சேவை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் காலகட்டமாகும்.

ஆனால் இந்த முறை நேர் எதிர்மறையான நிலைமையை விமான நிறுவனங்கள் சந்தித்தன.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள், கிறிஸ்துமஸ் தினம், அதற்கு அடுத்த நாள் என 3 நாட்களில் 6 ஆயிரம் விமானப் பயணங்கள் உலகம் முழுவதிலும் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

எனினும், தினமும் மில்லியன் கணக்கான பயணிகளை அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் பரிசோதித்து அனுப்பியிருக்கிறது.

டிசம்பர் 23-ஆம் தேதி மட்டும் 2.19 மில்லியன் பயணிகளைப் பரிசோதித்ததாக அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்தது.