Home கலை உலகம் ராகா வானொலி : தைப்பூச சிறப்பு நேர்காணல்

ராகா வானொலி : தைப்பூச சிறப்பு நேர்காணல்

691
0
SHARE
Ad

சுப்ரமணியம் வீராசாமி, உள்ளடக்க மேலாளர்

1. ராகாவில் இரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய தைப்பூசச் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களைப் பற்றிக் கூறுக:

மலேசியர்கள் 24 மணி நேரப் பக்திப் பாடல்களை ராகா வானொலி அல்லது SYOK செயலி வழியாகக் கேட்டு மகிழலாம்.

சுரேஷ், அஹிலா, ரேவதி, உதயா & கோகுலன், அறிவிப்பாளர்கள்

#TamilSchoolmychoice

1. உங்களின் இரசிகர்களுக்குத் தைப்பூச வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொள்க.

சுரேஷ் – ராகா அறிவிப்பாளர்

சுரேஷ்: நிர்ணயம் செய்துள்ளத் தைப்பூச எஸ்.ஓ.பி. விதிமுறைகளைப் பின்பற்றுவோம். வரும் காலம் சிறப்பிக்க முருகனை வழிபடுவோம். பக்தி நெறியோடு இத்தைப்பூசத்தை அனுசரிப்போம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…

அஹிலா சண்முகம்,

அஹிலா: இந்தத் தைப்பூச நாளன்று நம் அனைவரின் வேண்டுதல்களும் நிறைவேற முழுமனதுடன் வேண்டிக்கொள்வோம். இந்தத் தைப்பூசத்தைப் பக்தி நெறியுடன் அனுசரிப்போம்.

ரேவதி

ரேவதி: இவ்வாண்டுத் தைப்பூசத் தினத்தைப் பக்தி நெறியோடும் பாதுகாப்புடனும் கொண்டாடுவோம். இறையருளால் அனைத்தும் நலம் பெறும். வாழ்க வளத்துடன்!

உதயா – ராகா வானொலி அறிவிப்பாளர்

உதயா: தைப்பூசத் திருவிழா, நம் சங்கல்பங்கள், பூர்த்தியாகி நன்றி மலர்களைப் பக்தி மலர்களாய் சொரிவதற்கும், இனி எண்ணங்கள் நிறைவேற வேண்டுதல்கள் வைப்பதற்குமான உன்னத நாள். நல்லன வேண்டுவோம், நலமே வேண்டுவோம், புவி செழிக்க, நாம் சிறக்க சிறந்தன வேண்டுவோம். வெற்றி வேல் முருகனுக்கு, அரோகரா.

கோகுலன்

கோகுலன்: இந்த ஆண்டுத் தைப்பூசம் உங்களுக்கு அதிக மகத்துவத்தையும் நேர்மறையையும் தரட்டும். இந்த ஆண்டு தைப்பூசம் பொங்கலுக்குப் பிறகு வருவதால் நம் அனைவருக்கும் இது இரட்டிப்புக் கொண்டாட்டமாகும். செவ்வெனத் தைப்பூச விழாவைக் கொண்டாடுங்கள். ராகா வானொலியில் தைப்பூசச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழுங்கள்.