Home நாடு ரவீன் குமார் கிருஷ்ணசாமி ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம்

ரவீன் குமார் கிருஷ்ணசாமி ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம்

738
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை (மார்ச் 26) ஜோகூர் சுல்தான் முன்னிலையில் பதவியேற்றனர்.

மஇகாவின் சார்பில் கடந்த சில தவணைகளாக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்துவந்த ஆர்.வித்தியானந்தனுக்குப் பதிலாக தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவீன்குமார் கிருஷ்ணசாமி புதிய ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கிறார்.

ரவீன், மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

 

Comments