Home நாடு ஜோகூர் : இறுதி நிலவரம் : தேசிய முன்னணி 40 – பக்காத்தான் ஹாரப்பான் 11...

ஜோகூர் : இறுதி நிலவரம் : தேசிய முன்னணி 40 – பக்காத்தான் ஹாரப்பான் 11 – பெரிக்காத்தான் நேஷனல் 3 – பிகேஆர் 1 – மூடா 1

774
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஜோகூர் தேர்தலில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி 3-இல் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தமுள்ள 56 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை அமைக்க 29 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும்.  40 தொகுதிகளை கைப்பற்றியிருப்பதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை அமைக்கிறது.

பக்காத்தான் ஹாரப்பான் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஜசெக, அமானா இரண்டு கட்சிகளும் பக்காத்தான் ஹாரப்பான் சின்னத்தில் போட்டியிட்டன.

#TamilSchoolmychoice

மோசமாகத் தோல்வியடையும் என எதிர்பார்க்கப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் 3 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.

சொந்த சின்னத்தில் போட்டியிட்ட பிகேஆர் ஒரே ஒரு தொகுதியில் புக்கிட் பத்துவில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.