Home நாடு ஜோகூர் புக்கிட் பத்து தொகுதியில் மஇகா வேட்பாளர் எஸ்.சுப்பையா தோல்வி

ஜோகூர் புக்கிட் பத்து தொகுதியில் மஇகா வேட்பாளர் எஸ்.சுப்பையா தோல்வி

593
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: மஇகாவுக்கு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் புக்கிட் பத்து தொகுதியும் ஒன்று. இங்கு மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக எஸ்.சுப்பையா போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார்.

பிகேஆர் கட்சி இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர்தர் சியோங் சென் செர்ன் 9,439 வாக்குகளைப் பெற்றார். சுப்பையாவுக்கு 9,302 வாக்குகள் கிடைத்தன.

பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் தான் ஹெங் சூன் 3,989 வாக்குகள் பெற்றார். வாரிசான் சபா வேட்பாளர் லீ மிங் வென் 1,349 வாக்குகள் பெற்றார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் வேட்பாளர் ஆர்தர் சியோங் சென் செர்ன் 137 வாக்குகள் பெரும்பான்மையில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.