Home நாடு ஜோகூர் : தேசிய முன்னணி 36 – பக்காத்தான் ஹாரப்பான் 7 – பெரிக்காத்தான் நேஷனல்...

ஜோகூர் : தேசிய முன்னணி 36 – பக்காத்தான் ஹாரப்பான் 7 – பெரிக்காத்தான் நேஷனல் 3

766
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஜோகூர் தேர்தலில் இதுவரையில் 36 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தமுள்ள 56 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை அமைக்க 29 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும்.  36 தொகுதிகளை இதுவரையில் கைப்பற்றியிருப்பதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை அமைக்கிறது.

பக்காத்தான் ஹாரப்பான் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. மோசமான தோல்வியடையும் என எதிர்பார்க்கப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் 3 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.

#TamilSchoolmychoice

சொந்த சின்னத்தில் போட்டியிட்ட பிகேஆர் இதுவரையில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.