Home நாடு சொக்சோ மற்றும் மை காசே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா

சொக்சோ மற்றும் மை காசே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா

584
0
SHARE
Ad

சொக்சோ (PERKESO) மற்றும் (MY QASEH)
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா & பெர்கேசோ வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் வீடற்ற நிலை இல்லாமை (SIFAR GELANDANGAN) உருவாக்குதல்

தற்போது வீடற்ற நிலையில் இருப்பவர்கள், ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெறுவதற்கு பெர்கேசோவின் வேலை வாய்ப்புத் திட்டம் வழி அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

மலேசியக் குடும்பத்தின் வேலை உத்தரவாதத் திட்டம், அனைத்து மலேசியர்களுக்கும் 600,000 (6 இலட்சம்) வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளது.

ஆக மனிதவள அமைச்சு வேலையில்லாதோர்க்கு வேலை வாய்ப்புகளைத் தேடித் தர கடமைப்பட்டுள்ளது குறிப்பாக நாடோடிகளாகத் திரிபவர்களும் அதில் அடங்குவர்.

#TamilSchoolmychoice

பெஞ்சானா கெர்ஜாயா 2021இல் – 221,966
2022-இல் – 3 லட்சம் வேலை வாய்ப்புகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு வேலை இழந்தவர்கள், வேலையற்றோர் மற்றும் வீடற்றவர்கள் மேல் அதிக கவனம் செலுத்தப்படும்.

வீடற்றவர்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட அரசு, தனியார், அரசு சாரா அமைப்புகள் அனைவரும் இணைந்து இந்த முயற்சியை வலுப்படுத்த வேண்டும்.