Home வாழ் நலம் இளநீர் உற்சாக பானம்

இளநீர் உற்சாக பானம்

1046
0
SHARE
Ad

coconut-sliderகோலாலம்பூர், ஏப்ரல் 25- இளநீர் நமது உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புக்கள் அடங்கிய பானம்.

இதை பருகும்போது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து உடலின் செயல்திறனையும் அதிகரிக்கும்.

இளநீரில் நம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.

#TamilSchoolmychoice

இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். இளநீரில் இருக்கும் சோடியம் உப்பு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கவும், தசை பகுதியில் அதிகமாக சுண்ணாம்பு சத்து தங்க விடாமல் தடுக்கவும் உதவுகிறது. ஒரு இளநீர் நீங்கள் பருகினால் உங்கள் உடலுக்கு 37 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன.

பாஸ்பரஸ் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும். வைட்டமின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடை வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அதை தடுத்து, சிறுநீர் தாராளமாக வெளியேற இளநீர் உதவுகிறது.

இளநீர் இளமையை பாதுகாக்கும் அரிய பானம். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறு துணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது. 100 கிராம் இளநீரில் 312 மி.கி. பொட்டா சியமும், 30 மி.கி. மெக்னீசியமும் உள்ளது.

இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்ச்சியையும், வலுவையும் ஊட்டும். எல்லோருமே பளபளப்பான சருமத்திற்கு ஆசைப்படுகிறார்கள். அதற்கு தேவையான கந்தகம் உப்பு 24 மி.கி. இளநீரில் இருக்கிறது. கந்தக உப்பு ரத்தம் சுத்தம் அடையவும், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவும். தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது.

இளநீர் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் ரத்த நாளங்களில் வெப்ப தாக்குதலைத்தடுக்கும் கேடயமாக விளங்குகிறது. மூல நோய், கருப்பை ரணம், ரத்த சோகை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் இளநீருக்கு இருக்கிறது.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால், செரிமான உறுப்பு கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது இளநீர் அருந்தக் கொடுக்கலாம்.