பாங்காக் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 14) நடைபெற்ற தாய்லாந்து பொதுத் தேர்தலில் வாக்களிப்புகள் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல்கட்டத் தகவல்களின்படி முன்னாள் பிரதமர் ஷினவாத்ராவின் மகள் பாயிதோங்தார்ன் ஷினவாத்ரா (Paetongtarn Shinawatra) முன்னிலை வகிக்கிறார். எதிர்க்கட்சிகள் இணைந்து தாய்லாந்தில் அடுத்த ஆட்சி அமைக்கலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பாயிதோங்தார்ன் ஷினவாத்ரா தந்தையான ஷினவாத்ரா நாடு கடந்து துபாயில் வாழ்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவர் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.