Home உலகம் தாய்லாந்து : எதிர்க்கட்சிகள் அபார வெற்றி

தாய்லாந்து : எதிர்க்கட்சிகள் அபார வெற்றி

1124
0
SHARE
Ad
பாயிதோங்தார்ன் ஷினவாத்ரா

பாங்காக் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 14) நடைபெற்ற தாய்லாந்து பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற அடுத்த கட்ட நகர்வுகளை வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகள் நகர்த்தி வருகின்றன.

மூவ் ஃபோர்வார்ட் (MOVE FORWARD) என்ற கட்சி இளம் வாக்காளர்களிடையே பெரும் ஆதரவு பெற்று மிக அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.நாட்டில் முக்கிய அரசாங்க அமைப்புகளில் மறுமலர்ச்சி வேண்டும் என்ற முழக்கத்தோடு இந்தக் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. பித்தா லிம்ஜாரோன்ராட் இதன் தலைவராவார்.

அதற்கு அடுத்த நிலையில் முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஷினவாத்ராவின் மகள் பாயிதோங்தார்ன் ஷினவாத்ரா (Paetongtarn Shinawatra) கட்சி அதிக இடங்களைப் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

பாயிதோங்தார்ன் பிரதமராவாரா? அல்லது மூவ் ஃபோர்வார்ட் கட்சியின் தலைவர் பிரதமராவாரா? என்ற விவாதங்கள் நாட்டில் எழுந்திருக்கின்றன.

முன்னாள் இராணுவத் தளபதியான முன்னாள் பிரதமர் பிரயூத் சான் ஓச்சா சார்பு கட்சிகள் பொதுத் தேர்தலில் படுதோல்வியை அடைந்துள்ளன.

எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து தாய்லாந்தில் அடுத்த ஆட்சி அமைக்கும் சாத்தியமும் உண்டு. மூவ் ஃபோர்வார்ட் கட்சி தலைவரான பித்தா லிம்ஜாரோன்ராட், பாயிதோங்தார்ன் ஷினவாத்ராவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

பாயிதோங்தார்ன் ஷினவாத்ரா தந்தையான ஷினவாத்ரா நாடு கடந்து துபாயில் வாழ்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவர் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.