Home இந்தியா செந்தில் பாலாஜிக்கு சிக்கல் : ஊழல் வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜிக்கு சிக்கல் : ஊழல் வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

464
0
SHARE
Ad

சென்னை : கள்ளச் சாராய மரணங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகளை எதிர்நோக்கி வருகிறார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. டாஸ்மாக் துறைக்கும் பொறுப்பு அமைச்சராவார் இவர்.

இவர் மீதான ஊழல் புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று புதுடில்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும் செந்தில் பாலாஜிதான்.  போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக இவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இவர் மீதான புகார்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்  வழக்கினை துவக்கத்தில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது. இதனை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அமர்வு, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும், புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.