நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், ஓய்வூதியம் உள்ள அல்லது இல்லாத ராணுவ வீரர்கள் உட்பட அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சிறப்பு 200 ரிங்கிட் உதவித் தொகையையும் அறிவித்தார்.
“இந்த சிறப்பு உதவியானது ஒப்பந்த நியமனங்கள் உட்பட 1.3 மில்லியன் அரசு ஊழியர்களுக்கும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பயனளிக்கும்” என்று அவர் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அறிவித்தார்.
புத்ராஜெயா அரசு ஊழியர்களின் சம்பள மாற்றங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், இவை தற்காலிக நடவடிக்கைகள் என்றும் அவர் கூறினார். இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.