Home உலகம் தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலைத் தடுத்த சீனக் கப்பல்

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலைத் தடுத்த சீனக் கப்பல்

798
0
SHARE
Ad

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான படகு ஒன்றை சீனாவின் கடலோரக் காவல் கப்பல் தடுத்ததாகவும் அந்தப் படகின் மீது நீரைப் பாய்ச்சி தடுத்ததாகவும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தென்சீனக் கடலில் தொடர்ந்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறது. பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் விவகாரத்தில் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அடிக்கடி மோதல்கள் நிகழும் மையமாக தென் சீனக் கடல் உருவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

 

Comments