Home அரசியல் ‘சுஹாக்காம்’ அறிக்கையை வெளியிட வேண்டும் – நஜிப்புக்கு லிம் கிட் சியாங் சவால்

‘சுஹாக்காம்’ அறிக்கையை வெளியிட வேண்டும் – நஜிப்புக்கு லிம் கிட் சியாங் சவால்

562
0
SHARE
Ad

f0a4a6b5f7e5d8f1db9b74472df8867d.gif.pagespeed.ce.TRpNvojTI-கோத்தா கினபாலு, ஏப்ரல் 25 – மலேசிய பூர்வீக குடிமக்களின் நில உரிமை தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் (சுஹாக்காம்)ஆய்வு அறிக்கையை உடனடியாக காபந்து அரசாங்கப் பிரதமர் நஜிப் துன் ரசாக் வெளியிடவேண்டும் என்று ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கோத்தா கினபாலுவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையை தடுத்து வைக்க பராமரிப்பு அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று குறிப்பிட்ட லிம் கிட் சியாங், அடுத்த 24 நான்கு மணி நேரத்திற்குள் நஜிப் அந்த அறிக்கையின் மீது தனி கவனம் செலுத்தி, அதை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சபா, சரவாக் மாநிலங்களிலுள்ள பூர்வீக குடிமக்கள் மற்றும் தீபகற்ப மலேசியாவிலுள்ள  ‘ஒராங் அஸ்லி’ என்று அழைக்கப்படும் பழங்குடிமக்கள் ஆகியோரது நில உரிமைகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் அந்த ஆய்வு அறிக்கையை, தற்போது ‘சரவாக் ரிப்போர்ட்’ என்ற இணையதளம்  கசிய விட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நில மோசடி தொடர்பான ஆய்வு முடிவுகள் அடங்கிய அந்த அறிக்கை  நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாகவே தயாராகி விட்டது என்றும், ஆனால் அதிலுள்ள பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் முன்னரே சில அரசியல் தலையீடுகளால் முடக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பூர்வீக குடிமக்களின் நில உரிமைகளில் பல மோசடிகளும், அதிகார துஷ்பிரயோகங்களும் நடந்துள்ளதாக சுஹாக்காம் ஆய்வு தகுந்த ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளது.