ஏப்ரல் 25 – பரபரப்புடன் நடந்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் ஆதரவாளர்கள் தங்களின் கட்சிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது ஒருபுறம் இருக்க, தாங்கள் ஆதரிக்கும் கட்சிகளின் சின்னங்களை பதாகைகளாக, சுவரொட்டிகளாக, ஓவியங்களாக வரைந்து வைப்பது வழக்கமான ஒன்று.
ஆனால் வித்தியாசமான சிந்தனை கொண்ட இந்த பாஸ் கட்சி ஆதரவாளர், மரங்களின் காய்த்துத் தொங்கும் பச்சை நிற மாங்காய்களுக்குள் பாஸ் கட்சியின் சின்னத்தைக் கண்டு பிடித்துவிட்டார்.
வெள்ளை நிறத்தில் நிலா வடிவத்திலான வட்டம் ஒன்றை மாங்காய் மீது வரைவதன் மூலம் கிளைகளில் காய்த்துத் தொங்குகின்ற ஒவ்வொரு மாங்காயையும் பாஸ் கட்சியின் சின்னமாக எப்படி உருமாற்றியிருக்கின்றார் பாருங்கள்!