Home அரசியல் சுல்கிப்ளிக்கு வக்காளத்து வாங்கும் சுவா சொய் லெக்

சுல்கிப்ளிக்கு வக்காளத்து வாங்கும் சுவா சொய் லெக்

641
0
SHARE
Ad

Chua Soi Lekகோலாலம்பூர், ஏப்ரல் 25 – ஷா ஆலம் நாடாளுமன்ற தொகுதியில் சர்ச்சைக்குரிய பெர்க்காசா துணைத் தலைவரான சுல்கிப்ளி நோர்டினை தேசிய முன்னணி வேட்பாளராக நியமித்தது குறித்து நாடெங்கிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆனால் அது பற்றி கவலைப்படாமல் தேசிய முன்னணியைச் சேர்ந்த சில தலைவர்கள் தொடர்ந்து சுல்கிப்ளியை ஆதரிக்கும் படியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், ம.சீ.ச தலைவர் சுவா சொய் லெக் நேற்று சுல்கிப்ளி நியமனம் குறித்து கருத்துரைக்கையில்,

#TamilSchoolmychoice

“சுல்கிப்ளி வேட்பாளராவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் முன்பு பாஸ் கட்சியுடன் இருந்த போது அது போன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எதிர்கட்சித் தலைவர் அன்வாருக்கு நல்ல நண்பனாகவும், அவரது வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். ஆனால் இப்போது அவர் தனது தவறை உணர்ந்து திருந்திவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் நஜிப், சுல்கிப்ளிக்கு தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியர் முத்தம் கொடுத்ததை வைத்து, நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களும் அவரை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.