ஆளுநர் தற்போது நிலுவையில் இருந்த சட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற நவம்பர் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என தமிழ் நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.
முன்னதாக, பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது உள்ளிட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு திருப்பி அனுப்பியிருந்தார். இந்த சட்ட மசோதாக்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன.
Comments