Home நாடு கெமாமான் இடைத் தேர்தல் : திரெங்கானு மந்திரி பெசார் வேட்பாளர்

கெமாமான் இடைத் தேர்தல் : திரெங்கானு மந்திரி பெசார் வேட்பாளர்

389
0
SHARE
Ad

கெமாமான் : எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பாஸ் திரெங்கானு மாநில மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தாரை அறிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 16) மாலை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கெமாமானில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தேசிய முன்னணி சார்பில் அம்னோவின் வேட்பாளராக  ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி டான்ஸ்ரீ ராஜா முகமட் அஃபாண்டி ராஜா முகமட் நூர் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

53 வயதான சம்சூரி பாஸ் கட்சியின் 3 உதவித் தலைவர்களில் ஒருவராவார். திரெங்கானு பாஸ் கட்சியின் துணை ஆணையருமாவார்.

இயந்திரவியல் துறையில் பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்ற சம்சூரி பாஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

மத்திய அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு பாஸ் கட்சிக்கு ஏற்பட்டால் சம்சூரியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூட ஆரூடங்கள் நிலவுகின்றன.

நாளை சனிக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி கெமாமான் இடைத் தேர்தலுக்கான  வேட்புமனுத் தாக்கலாகும்.